Back

Department of Tamil:

                                ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்விச் சேவையில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் தமிழ் மொழி மீதான ஆவலின் விழைவாக குன்றின் மேலிட்ட விளக்காகத் தோன்றியது தமிழ்த்துறை. யு.ஜி.சி.-யின் வரைமுறைக்கு உட்பட்ட தகுதிவாய்ந்த எட்டு பேராசிரியப் பெருமக்கள் வழிநடத்தினார்கள். தமிழ்த்தறையின் துறைத்தலைவராக உதவிப் பேராசிரியர் திருமதி. குமாரிவேலம்மாள் செயல்பட்டு வருகின்றார். 2018-ல் 46 மாணவர்களுடன் செயல்படத் தொடங்கிய தமிழ்த்துறையானது, 2023-ம் கல்வியாண்டு வரை 70 இளங்கலைத் தமிழ் பட்டதாரிகளை உருவாக்கிய பெருமையுடையது. தற்போது எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் 2019-2020-ம் கல்வியாண்டில் தமிழ்த்துறையில் கணியன் பூங்குன்றனார் கலை இலக்கியக் கழகம் தொடங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து இரண்டு கருத்தரங்கானது நிகழ்த்தப்பட்டது. கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் பாடல் ஆகிய நுண்கலைப் போட்டிகள் நடத்தி மாணவர்களைப் பங்களிக்கச் செய்கின்றோம் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த பட்டிமன்றங்கள் நடத்தி விவாத மேடை அமைத்து மாணவர்களை ஊக்குவிக்கின்றோம். பிற கல்லூரிகள், அரசு விழாக்களில் மாணவர்கள் பங்கேற்று பரிசும் பாராட்டும் பெறுவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தித் தருகின்றோம்.

Faculties